×

தேமுதிக கொடி அறிமுக நாள் விழா

மதுரை, பிப். 13: தேமுதிக கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, இக்கட்சியினர் சார்பில் கொடி அறிமுக 20வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில், செயலாளர் கவியரசு தலைமையில், அவைத்தலைவர் செல்வகுமார் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் மதுரை நகர் மற்றும் புறநகர்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இதில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Introduction Day ,
× RELATED வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு