இலவச சைக்கிள் வழங்கும் விழா

மதுரை, பிப். 13: மதுரை புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளித்தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். செயலாளர் அஷ்ரப் யூசுப், தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு ராஜன்செல்லப்பா எம்எல்ஏ சைக்கிள்களை வழங்கி, “செல்போன் பயன்பாட்டை குறைத்து, படிப்பில் கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம். தலைகுனிந்து படித்தால், தலைநிமிர்ந்து வாழலாம் என அறிவுரை கூறினார்.முன்னாள் கவுன்சிலர்கள் அபுதாஹிர், சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், நாகராஜன், வக்கீல்கள் கண்ணன், கோபி கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் ஜாகீர்உசேன், ரஹ்மத்துல்லா தொகுத்து வழங்கினர். முதுகலை தமிழாசிரியர் நூருல்லா நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: