×

காங். இடதுசாரிகள் பிரிந்து கிடந்ததால் பா.ஜ.க. மிருக பலத்ேதாடு வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது மதுரை கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

மதுரை, பிப். 13: காங். இடது சாரிகள் பிரிந்து கிடந்த காரணத்தால், பா.ஜ.க. மிருக பலத்தோடு வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டு விட்டது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். மதுரை பழங்காநத்தத்தில் தேசம் காப்போம் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ``குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காங் மற்றும் இடது சாரிகள் பிரிந்துகிடந்த காரணத்தால் பாஜக மிருக பலத்தோடு வெற்றி பெறும் நிலை உருவாகிவிட்டது. சமூக நீதி கோட்பாடுகளை சிதைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இந்தியாவை இந்திய ராஷ்ட்ரியமாக அறிவிக்கவேண்டும் என்பதும் அதற்கு தடையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் நீண்டநாள் கனவு. ஆனால் அதனை எளிதாக செய்ய விடாமட்டோம்.

2021ல் இந்தியாவில் யாரும் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களும் இருக்ககூடாது என்பதற்கான முயற்சிதான் குடியுரிமை திருத்த சட்டம்’ என்றார்.
மார்க்சிஸ்ட் எம்பி.சு.வெங்கடேசன் பேசுகையில், ``நாடாளுமன்றத்தில் பாஜகவினர் எங்களை தேச துரோகிகளாக அறிவிக்கின்றனர். சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்ள் தேச விரோதிகள் என்றால் நாங்கள் தேச விரோதிகள்தான். நாடாளுமன்றத்தில் பாஜகவால் நாங்கள் தேசதுரோகிகள் என்று அழைப்பதை பெருமையாக கருதுகிறோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனது போராட்டத்தை முன்னெடுத்தவர் மகாத்மா காந்தி. இவரது கனவை நிறைவேற்றாமல் கோட்சேவின் கனவை தான் நிறைவேற்றுகிறது பா.ஜ.க,. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் தனி மெஜாரிட்டி இருக்கின்ற ஆணவத்தில் அனைத்து மாண்புகளையும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டுவருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளை பற்றி பேசாமல் மிகச்சிறிய நாடான பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன்? உலகின் வல்லரசுகளோடு மோதுவதை விடுத்து வளர்ச்சியில்லாத பாகிஸ்தானுடன் மோதி தனது பலத்தை நிருபித்து வருகிறது. ஆணவத்தோடு இருந்த ஆங்கிலயேர்களை விரட்டியடித்தது போல பாஜக அரசையும் விரட்டியடிப்போம்’’ என்றார்.

கொளத்தூர் மணி பேசுகையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது போல திசைதிருப்பபடுகிறது. ஆனால் அனைவருக்கும் இது எதிரானதுதான். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமக்கள் பதிவேடு என்பது கடல் எல்லைகளில் இருப்பவர்களை பற்றிய கணக்கெடுப்புதான். தற்போதைய குடிமக்கள் பதிவேட்டில் 87ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு பெற்றோரின் பிறப்புசான்றிதழும் கேட்கப்படும் .என்பிஆர் கணக்கெடுப்பு அரசுக்கு எதிராக எதிர்கருத்துகளை சொல்பவர்களை நாட்டின் சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறி பழிவாங்கும் நிலை உருவாகும். பிரதமர் மோடிக்கே இரண்டு பிறந்தநாள் உள்ளது அவருக்கே பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் பிரச்னை உருவாகும். நெஞ்சார பொய்தன்னை சொல்ல வேண்டாம் என்ற ஓளவையாரின் வரிகளுக்கு எதிராக நெஞ்சார பொய் சொல்லும் கூட்டமாக பாஜகவின் கூட்டம் உள்ளது’’ என்றார்.

Tags : BJP ,talks ,meeting ,Madurai ,Thirumavalavan ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...