வேடசந்தூரில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

வேடசந்தூர், பிப். 13: வேடசந்தூர் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் பாண்டியன், தலைமையாசிரியை நாகலெட்சுமி தலைமை வகித்தனர். வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம் கலந்து கொண்டு 202 மாணவர்கள், 293 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘ இன்று மாணவ, மாணவிகளின் மிகப்பெரிய பாதிப்பு மற்றும் பெற்றோர்களின் பயம் செல்போனாக உள்ளது. இவர்களின் கல்வி தரம் உயர வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டுதான் லேப்டாப் வழங்கப்படுகிறது.

ஆனால் இன்று மாணவ, மாணவிகள் படிக்கும் சூழ்நிலையில் இருந்து மாறி வேறுபாதையில் சென்று விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அனைவரும் சிறப்பான எதிர்காலம் கல்வி மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து தங்கள் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார். இதில் சுன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பாபுசேட், நிஜாம், சுப்பிரமணி, மணிமாறன், கிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் சவடமுத்து, பார்த்திபன் மற்றும் இரு பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: