×

மானாவாரியில் பருத்தி பயிரிடும் முறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பழநி, பிப். 13: மானாவாரியில் பருத்தி பயிரிடும் முறை குறித்து வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மானாவாரியில் பருத்தி பயிரிட எல்.ஆர்.ஏ- 5166, சுமங்கலா, கே-11, எஸ்.வி.பி.ஆர்-2, கே.சி-2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். 45*15 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து எக்டேருக்கு 15 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். பஞ்சு நீக்கிய விதையுடன் 3 கிராம் பாலிகோட், கார்பன்டைசிம் 2 கிராம், இமிடர்குளோபரிட் 7 கிராம், சூடா மோனாஸ் ஃப்ளூரசன்ஸ் 10 கிராம், அசோபாஸ் 40 கிராம் கலந்து விதைப்பதால் விதைத்த 45வது நாள்வரை சாறு உறிஞ்சும் பூச்சிகளிலிருந்து பயிரினை காத்து ஆரம்பத்தில் நல்லபயிர் வளர்ச்சி அடைய முடியும்.

நுண்ஊட்டச்சத்தாக எக்டேருக்கு சிங்க் சல்பேட் 50 கிலோ அடியுரமாக அளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்கிறது. பயிரின் வயது 150 நாட்களுக்குள் இருக்கும்பேது, 60 கிலோ தழைச்சத்து இட வேண்டும். 150 நாட்களுக்கு மேல் ஆகும்போது தழைச்சத்து 80 கிலோவிற்கு மேல் இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு தழைச்

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்