×

பஸ்-கார் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர், பிப். 13: திருப்பூர் புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே பஸ்-கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்-அவிநாசி ரோடு புஷ்பா பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பஸ் ஊட்டி, கோபி, கோவை, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இது போக 100க்கும் மேற்பட்ட நகர பஸ்களும் இயக்கப்படுகிறது. மாநகரின் மையப்பகுதியாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில், திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் சேதமானது. இதையடுத்து காரில் இருந்தவர்களுக்கும், பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காரில் வந்தவர்கள், திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெரியமாரியம்மன் வீதி உலாவிற்கு தடை...