×

மழை குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

வால்பாறை,பிப்.13:  வால்பாறை பகுதியில் மழை குறைந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் சரிய துவங்கியது. இதனால்  பி.ஏ.பி விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. இந்நிலையில்  பி.ஏ.பி. அணைகளின் நீர் மட்டம் குறைந்துவிட்டது. எனவே வழக்கமாக பிப்ரவரி மாதம் பெய்யும் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியான வால்பாறை பகுதியில் பெய்யும் மழை சோலையார் அணை, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகளில் சேமித்து வைக்கப்பட்டு  கோவை, ஈரோடு மற்றும்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி பாசனம் பெறும் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் பி.ஏ.பி.  திட்ட அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்துவிட்டது. எனவே அணைகளின் நீர் மட்டம் அகல பாதாளத்தில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி