காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய போதை வாலிபர் கைது

கோவை, பிப்.13:கோவையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் ஒரு நபர் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சென்ற காட்டூர் போலீசார் அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அதே நபர் காட்டூர் போலீஸ் நிலையத்துக்குள் மீண்டும் மதுபோதையில் நுழைந்தார். அப்போது அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. மகேந்திரனிடம் தகாத வார்த்தைகளால் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த சக போலீசார் அந்த நபரை இழுத்து சென்று வெளியில் விட்டுள்ளனர்.அப்போதும் போக மறுத்த அவர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Advertising
Advertising

இதையடுத்து எஸ்.எஸ்.ஐ. மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த பெத்துகுமார் (34), கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இவரின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி. இவர், கடந்த 10 ஆண்டுகளாக அந்தமானில் வசித்து கூலி வேலை செய்து வந்ததும், சமீபத்தில்தான் கோவை வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: