×

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது

கோவை, பிப்.13:கோவை போத்தனூர் மேட்டூரை சேர்ந்தவர் நாகராஜ்(35). இவருடைய மனைவி லட்சுமி(35). குடிப்பழக்கம் உடைய நாகராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதேபோல் நேற்று முன்தினம் கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜ் ஆத்திரமடைந்து லட்சுமியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் நாகராஜ் மீது போத்தனூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED பெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது