×

மர்ம நபர்கள் கைவரிசை குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர், பிப். 13: பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட வேலூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் வசித்தவர் முனிவேல் (45). இவர் கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கோயம்புத்தூரில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு திவ்யா (13) என்கிற ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முனிவேலும், மரியாவும் கடந்த 10 ஆணடுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அதன்பின் கேரளாவில் வேலை செய்து வந்த முனிவேல் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வேலூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகள் சுரேகா (34) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 6 மாதத்தில் ரித்விகா என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளார். முனிவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் சுரேகாவுக்கும், முனிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுரேகா கோபித்து கொண்டு புதூரில் வசிக்கும் அவரது சகோதரி தனலட்சுமி வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முனிவேல் தாய் தனபாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,persons ,
× RELATED கர்நாடகா மாநிலத்தில் இருந்து 150 கிமீ...