×

தா.பழூர் பகுதியில் இயந்திர தட்டுப்பாட்டால் நெல் அறுவடை தாமதம்

தா.பழூர், பிப்.13: போதிய இயந்திரம் இல்லாததால் நெல் அறுவடை தாமதம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் இந்த ஆண்டு நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டதில் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்படுவதால் போதிய இயந்திர வசதிகள் இல்லை. இதனால் நெல் அறுவடை மந்தமாக இருந்து வருகிறது.  தா.பழூர் சுற்றியுள்ள இடங்கண்ணி, கூத்தங்குடி, அண்ணகாரன்பேட்டை, குடிகாடு, தென்கச்சி பெருமாள் நத்தம், வாழைக்குறிச்சி ,அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால் போதிய இயந்திரங்கள் இல்லாததால் மிகவும் தொய்வாக நெல் அறுவடை நடைபெறுகிறது. அதிகபடியான இடங்களில் நெல் முதிர்ச்சி அடைந்து வயலில் விழுந்து கிடக்கிறது. இதில் பறவைகள் அமர்ந்து நெல் சிதறி கொட்டுகின்றன.
ஆகையால் விவசாயிகள் படுத்துக்கிடக்கும் நெல்வயல்களில் பறவைகள் அமர வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.நெல்மணிகள் வயல்களில் நிலங்களில் சாய்ந்து இருப்பதால் அவற்றில் நெல் அறுவடை செய்வது இயந்திரங்களுக்கு கூடுதல் நேரம் ஆவதால் இயந்திரங்களை இறக்கி அறுப்பதற்கும் யோசனை செய்கின்றனர் இயந்திர உரிமையாளர்கள்.

 அதுபோல நெல் நிலத்தில் சாய்ந்து இருப்பதால் மழை தூரல் எதுவும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கோடை மழை முன்னதாக வந்து விடுமோ என பீதியில் உள்ளனர். விளைந்த நிற்கில் மழை பொழிந்தால் உடனடியாக அவை முளைத்து விடும். இதனால் இந்த வருட விளைச்சல் முற்றிலும் வீணாகி விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். விவசாயத்திற்கு ஆட்கள் இல்லாமல் இயந்திரங்களை பயன்படுத்தியதால் தற்பொழுது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : area ,Pallur ,
× RELATED பள்ளூர் வாராஹி