×

கால்களை பதம் பார்ப்பதால் விவசாயிகள் வேதனை அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்தளித்து ஒளிவுமறைவின்றி வளர்ச்சி பணிகளை மக்களுக்காக செய்ய காத்திருக்கிறோம்

பெரம்பலூர்,பிப்.13: ஒளிவு மறைவின்றி, வளர்ச்சித் திட்ட பணிகளை, அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்தளித்து மக்கள் பணியாற்ற காத்திருக்கிறோம் என பெரம் பலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை உறுதி அளித்துள்ளார். பெரம்பலூர் ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் துறைமங்கலம் ஒன்றிய அலுவ லகத்தில் உள்ள கூட்ட மன்றத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் ஒன்றியக்குழுத் தலைவர் (திமுக) மீனா அண்ணாதுரை தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்தாதேவி குமார் (திமுக), பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு த்தலைவர் மீனா அண்ணாதுரை (திமுக) பேசியதாவது : பெரம்பலூர் ஒன்றியக் குழு நிர்வாகம் ஒளிவுமறைவின்றி, வளர்ச்சித் திட்டப் பணிகளை, அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்தளித்து மக்கள் பணியாற்ற காத் திருக்கிறோம். ஒன்றிய கவுன்சிலர்கள் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுங்கள். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒன்றிய பொதுநிதி, மத்திய, மாநில அரசுகளின் திட்ட நிதி மட்டுமன்றி, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளையும், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில அரசின் சிறப்பு நிதிகளையும் பெற்று, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பெரம்பலூர் ஒன்றியத்திலுள்ள 14வார்டுகளிலும் தரமான சாலைகள் அமைக்கவும், ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப் பாட்டிலுள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு மக்களுக்குத் தேவையான வள ர்ச்சித் திட்டப்பணிகளை நி றைவேற்றி,மாவட்டத்திலும் மாநிலத்திலும் சிறந்த ஒன் றியமாக பெரம்பலூர் ஒன் றியம் பெயரெடுக்க முயற் சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். பின்னர் ஒன்றியக்குழுத் தலைவருக்கு புதிய ஜீப் வாங்குதல், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை பழுது நீக்கம் செய்தல், ஜீப் டிரைவருக்கு 20ஆண்டு களாக விபத்தின்றி பணியாற்றியதற்காக தங்க மெடல் வழங்குவது, அலுவலக பணியாளர்களுக்கு தே வையான உபகரணங்கள் வாங்குதல், ஒன்றிய வளா கத்தில்உள்ள ஆண்கள் மற் றும் பெண்கள் கழிப்பறை கள்சீரமைத்து பழுதுநீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மலர்கொடி (திமுக), செல்வக்குமாரி (தி முக), கலையரசன் (திமுக), தேவகி (திமுக), சாம்குமார் (திமுக), தெய்வமணி (தி முக),ராஜேந்திரன் (திமுக), பாண்டியன் (அதிமுக) பிரியா (அதிமுக), சக்தி (அதிமு க), பாப்பாத்தி (தேமுதிக), வசந்தா (அமமுக) மற்றும் பெரம்பலூர் வட்டார வளர் ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளிதரன், ஒன்றிய மேலாளர் ராஜேந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர் ஆனந்தன், வடக்கு மாதேவி அண்ணா துரை, கோனேரிப்பாளையம் குமார், கல்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தரமற்ற பணியால் சேதமாகும் தடுப்பணைகள்: விவசாயிகள் வேதனை