×

ஒன்றியக்குழு தலைவர் உறுதி பெரம்பலூர் நகர பகுதியில் தடையின்றி கிடைக்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள்

பெரம்பலூர், பிப். 13: பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் கடந்த 2019 ஜனவரி 1ம்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், பொதுமக்கள் அதிகளவு எளிதில் சென்று வரும் பெட்டிக்கடை போன்ற கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் போன்றவை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற டம்ளர்களை குடிமகன்கள்தான் அதிகளவு வாங்கி செல்கின்றனர் என்பதால் கடைகளில் இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெரம்பலூர் நகராட்சி பகுதியை சுற்றிலும் விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் சரக்குகளை வாங்கி கொண்டு, கூடவே, கடைகளில் வாங்கிச் செல்லும் பிளாஸ்டிக் டம்ளர் உட்பட சைடீஸ்களை பயன்படுத்தி விட்டு அப்படியே போட்டு விட்டு செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் புகுந்து அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலையும் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அனுமதியின்றி லாபம் பார்க்கும் நோக்கில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள்தான். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : President ,city area ,Union Committee ,Perambalur ,
× RELATED கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும்