×

தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் அருகே மினி பஸ்கள் அட்டகாசம் அதிகரிப்பு

கரூர், பிப்.13: கரூர் தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் அருகே மினி பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. கரூர் தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் வழியாக கரூர் மாவட்ட பகுதிகள், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன. மேலும், இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து, தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த நிறுத்தத்தில் நின்று ஏறிச் செல்கின்றனர். இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நிறுத்தம் எப்போதும் வாகன நெருக்கடியுடன் காணப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி செல்லும் மினி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நேரம் நிறுத்துவதால், மற்ற பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அவ்வப்போது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற நிலைதான் கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பார்வையிட்டு டிரைவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,Thanthonimalai ,
× RELATED உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரிப்பு