×

தக்காளி, எலுமிச்சை விலை சரிவு ரூ.150க்கு விற்றது 40 ஆனது

கரூர், பிப்.13: கரூரில் தக்காளி மற்றும் எலுமிச்சை விலை குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. மலைக் காய்கறிகள் ஊட்டியில் இருந்தும், மற்ற காய்கறிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்தும் கரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மார்க்கெட்டில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி ரூ.10ஆக இருந்தது படிப்படியாக உயர்ந்து ரூ.40ஆக உயர்ந்தது. தற்போது மீண்டும் விலை குறைய தொடங்கியுள்ளது. உழவர் சந்தைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்தது. கடைகளில் தக்காளி ரூ.15க்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல எலுமிச்சை விலையும் கணிசமாக குறைந்துவிட்டது. கிலாவுக்கு ரூ.150வரை விலை உயர்ந்த எலுமிச்சை படிப்படியாக விலை குறைந்தது. நேற்று உழவர் சந்தைகளில கிலோ ரூ.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எலுமிச்சை பழ விலை உயர்வின் காரணமாக ஓட்டல்களில் நிறுத்தப்பட்டிருந்த எலுமிச்சை சாதம் மீண்டும் தயாரித்து வழங்கப்படுகிறது.

Tags :
× RELATED எலுமிச்சை விலை உயர்வு