×

கொப்பரை தேங்காய் குறைந்த விலைக்கு ஏலம் உற்பத்தியாளர்கள் கவலை

க.பரமத்தி, பிப்.13: கொப்பரை தேங்காய் முதல் ரகம் ஒரு கிலோவிற்கு ரூ.4 குறைந்து ஏலம் போனதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி மற்றும் சின்னதாராபுரம் ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக, மீதமுள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 846 மூட்டைகளில் 38,783 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.98, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.104, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.4 குறைந்து ஏலம் போனது. இதேபோல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 2251கிலோ எடையுள்ள 9380 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.19, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.39 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1உயர்ந்து ஏலம் போனது. கொப்பரை தேங்காய் விலை குறைந்து ஏலம் போனதால் தேங்காய் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Auction manufacturers ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...