×

வேப்பம்பாளையம் அருகே லாரி மோதி டிரைவர் பலி

கரூர், பிப். 13: கரூர் கோவை சாலை வேப்பம்பாளையம் அருகே லாரி மோதி டிரைவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் பாகநத்தத்தை சேர்ந்தவர் கார்த்திக்கேயன்(45). டிரைவர். இவரது மாமனார் வீடு சின்னதாராபுரத்தில் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சின்னதாராபுரம் சென்றார். கரூர்-கோவை சாலை வேப்பம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக்கேயன், ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Driver kills driver ,Veppampalayam ,
× RELATED சூலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி டிரைவர் பலி