பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் பைப்லைன் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு, பிப்.13: பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ₹9 லட்சம் செலவில் கட்டப்பட்டு இதன்மூலம் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லலகுப்பம்- மேல்பட்டி சாலையில் பைப்லைன் உடைந்து கடந்த 2மாதங்களுக்கு மேலாக நீரானது வீணாகி சாலையில் செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீரை சேமிக்கும் வண்ணம் உடைந்த பைப் லைன்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: