பொய்கை அடுத்த மோட்டூர் பகுதியில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

பள்ளிகொண்டா, பிப்.13: பொய்கை அடுத்த மோட்டூர் பகுதியில் நேற்று பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 153வது எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 260க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிபாய்ந்து ஓடியது. அதிவேகமாக ஓடி குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹55,000, இரண்டாம் பரிசு ₹40,000, முன்றாம் பரிசு ₹30,000 என மொத்தம் 65 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் முரளிகுமார், துணை தாசில்தார் விஜயகுமார் உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: