திருநங்கைகளால் போக்குவரத்து பாதிப்பு

விழா நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகில் 4 திருநங்கைகள், அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு கொண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக திடீரென மாடு ஒன்று ஓடி வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் எங்கு ஓடுவது என தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertising
Advertising

Related Stories: