×

தூத்துக்குடி மரக்கடையில் ரூ.2 லட்சம் மரங்கள் திருட்டு ஒர்க்ஷாப் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடியில் மரக்கடையில் ரூ.2 லட்சம் மரங்கள் திருடிய ஒர்க்ஷாப் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகேயுள்ள கிரேஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டி(47). இவர் ஆரோக்கியபுரம் மெயின் ரோட்டில் மரக்கடை நடத்தி வருகிறார். இங்கு மரங்கள், மரப்பலகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மரங்கள், மரப்பலகைகள் தொடர்ந்து திருடுபோயுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து கடந்த 9ம்தேதி பாண்டி, தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு டூவீலரின் முன்பகுதியில் மரங்களையும், பலகைகளையும் அவ்வப்போது திருடி செல்வது பதிவாகி இருந்தது. மேலும் அதனை அந்த கடையின் ஊழியரான கோவில்பிள்ளைவிளையைச் சேர்ந்த எட்வின் (33) மற்றும் அதன் அருகே ஒர்க்ஷாப் வைத்துள்ள அய்யர்விளையைச் சேர்ந்த மைக்கேல் தாமஸ் (44) ஆகியோர் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மரத்தடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : persons ,workshop owner ,Rs ,
× RELATED தடையை மீறி தொழுகை நடத்திய 37 பேர் மீது வழக்கு