தூத்துக்குடியில் 26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைத்தீர் கூட்டம்

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக்கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, முன்னாள் படைவீரர் நலன், உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>