தூத்துக்குடியில் தொழிலாளி பைக் எரிப்பு

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடியில் தொழிலாளியின் பைக்கை தீ வைத்து எரித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் பிரவீன்(29). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வழக்கம் போல வீட்டருகே நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை அவரது பைக் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரவீன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதுகுறித்த தகவலின் பேரில் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பைக் முன்விரோதம் காரணமாக தீ வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என்றும் பைக்கிற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: