×

சங்கரன்கோவில் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 3பேர் கைது

சங்கரன்கோவில்,பிப்.13:  சங்கரன்கோவில் அருகே உள்ள உமையத்தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த  முப்பிடாதி மகன் சீனிப்பாண்டி(39).  கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழமரத்தோணி கிராமத்தை சேர்ந்தவர் அங்கையா மகன் மணிகண்டன்(38).  சீனிப்பாண்டியின் மணல் லாரி போலீசில் சிக்கியது. இதனை மணிகண்டன் தான் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கருதிய சீனிப்பாண்டி, ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் காளிராஜ்(45), மாடசாமி மகன் முப்பிடாதி, செல்வராஜ் மகன் வைரமுத்து உள்ளிட்ட 4 பேர், மணிகண்டனின் வீட்டிற்கு சென்று மணிகண்டன், அவரது உறவினர் பூமாரி ஆகியோரை அவதூறாகபேசி, சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் காயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து காளிராஜ், முப்பிடாதி, வைரமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஒடிய சீனிப்பாண்டியை தேடி வருகின்றனர்.

Tags : house ,Sankarankoil ,
× RELATED வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து...