×

தென்காசி அருகே பாம்பு கடித்து பெண் சாவு

நெல்லை, பிப். 13:  தென்காசி அருகே நயினாரகத்தில் பாம்பு கடித்து பெண் பலியானார். தென்காசி, நயினாகரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள்(35). இவர் ேநற்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்  அப்போது,  வீட்டில் நுழைந்த பாம்பு இவரை கடித்தது.  மாரியம்மாளை   சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Snake bite girl ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் மனுநீதி நாள் கூட்டங்கள் ஒத்திவைப்பு