×

விகேபுரம் அருகே பதுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

விகேபுரம், பிப். 13:  விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் தெருவில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்னி தெருவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நாய்கள் தொடர்ந்து குரைத்தன. சத்தம் கேட்டு அத்தெருவை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர், தனது வீட்டை விட்டு வெளியே வந்துபார்த்த போது தெருவில் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்துவந்த அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கியப்பன் தலைமையிலான கோபாலகுமரேசன், அருணாசலம் உள்ளிட்ட வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து அம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags : Vaikapuram ,
× RELATED ஆறு பாயத்துவங்கும் இடத்திலேயே...