×

களக்காடு அருகே கிளீனர் மாயம்

களக்காடு, பிப்.13:  களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி (27). இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி (23) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. பாலாஜி தனியார் பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற பாலாஜி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பாலாஜி பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாலாஜியை தேடி வருகின்றனர்.

Tags : Kalakkad ,
× RELATED இளம்பெண் மாயம்