×

சம்பா அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி மத்திய அரசின் உழவர் கடன் அட்டை விவசாயிகள் பயன்பெற அழைப்பு

திருவாரூர், பிப். 13: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகள் மத்திய அரசின் உழவர் கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரடிட் கார்ட் எனப்படும் உழவர் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த உழவர் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு விழிப்புணர்வு பிரசாரமானது மத்திய அரசு மூலம் கடந்த 8ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த பயிர் கடன் அட்டை வழங்கப்பட உள்ளதால் பிரதம மந்திரி நிதி உதவி திட்ட பயனாளிகள் மற்றும் தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களின் சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் கிளை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உழவர் கடன் அட்டை பெற்று அதன் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே உழவர் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகள் கடன் தொகை வரம்பை உயர்த்தவும் விண்ணப்பிக்கலாம். மேலும் செயல்படாத உழவர் கடன் அட்டை வைத்துள்ளவர்கள் அதனை செயல்படுத்தி கொள்ளவும் மற்றும் புதிய கடன் வரம்பிற்கு அனுமதி பெறவும் விண்ணப்பிக்கலாம். எனவே இதற்கான விண்ணப்பத்தினை பொது சேவை மையங்கள் மூலமும் பெறலாம் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...