×

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

திருவாரூர், பிப். 13: திருவாரூரில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை டிஆர்ஓ பொன்னம்மாள் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. இதனை டிஆர்ஓ பொன்னம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் தியாகபாரி, பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் நாளை வரையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் ஹாக்கி ,கூடைப்பந்து, இறகுப்பந்து, வாலிபால் ஆகிய போட்டிகள் நேற்று நடைபெற்றன. இன்று 2வது நாளாக நடைபெறும் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. 3வது நாளாக நாளான நாளை ( 14ம் தேதி) தடகளம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெறும் நிலையில் இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 786 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகவேந்தன் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Sports Competition ,Cup ,
× RELATED 9 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன்...