×

அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்: 150 மாணவர்கள் தேர்வு

திருத்துறைப்பூண்டி, பிப். 13: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரியில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மற்றும் சென்னை ரீ மார்க் யூமன் ரிசோஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு பயின்று கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு கல்லூரி முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார். சென்னை ரீ மார்க் யூமன் ரிசோஸ் நிறுவனம் சார்பில் ஞானசேகர், விஜயகுமார், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 150 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

Tags : Placement Camp ,Government College ,
× RELATED தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை நடக்கிறது