இஞ்சிக்கொல்லையில் மக்கள் நேர்காணல் முகாம்

கும்பகோணம், பிப்.13: கும்பகோணத்தை அடுத்த இஞ்சிக்கொல்லை ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். ஆர்டிஒ (பொ) செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில், 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து 450 மனுக்கள் பெறப்பட்டு, 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: