3 மாதங்கள் நடக்கிறது வயல்வெளியில் முதியவர் சடலம் மீட்பு

பாபநாசம், பிப்.13: பாபநாசம் அருகே மெலட்டூர் அடுத்த சித்தர் காட்டில் 70 வயது மதிக்கத் தக்க பெரியவர் இறந்த நிலையில் உடல் வயல் வெளியில் கிடந்தது. தகவலறிந்த மெலட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கைலி, சட்டை அணிந்திருந்தார். உடல் அழுகி காணப்பட்டதால் இறந்து நான்கைந்து தினங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எங்கிருந்து வந்தார். முதுமை காரணமாக இறந்தாரா என மெலட்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: