×

வேதாரண்யம் தாலுகாவில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அண்ணா திராவிட கழகம் கோரிக்கை

வேதாரண்யம்,பிப்.13: வேதாரண்யம் தாலுகாவில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அண்ணா திராவிட கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் தாலுகாவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சுமார் 24 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் தலைஞாயிறு பிராந்தியங்கரை மூலக்கரை உள்ளிட்ட ஆற்று பாசன பகுதியில் சுமார் 12ஆயிரம் ஹெக்டேரும் மானாவரியில் மழையை மட்டுமே நம்பி உள்ள ஆயக்காரன்புலம் வாய்மேடு ஆதனூர் பஞ்சநதிகுளம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் சம்பா சாகுபடி நடைபெற்றது. தற்போது கதிர்கள் முற்றி சம்பா அறுவடை பணி தாலுகா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. இதனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் கொள்முதல் நிலையத்தில் மெத்தனமாக நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நேரடி கொள்முதல் நிலையம் திறந்தவுடன் ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் போடுவதற்காக கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். குறைந்தபட்சம் அறுவடை செய்த நெல்லை விற்க நான்கு நாட்கள் காத்து கிடக்க வேண்டியுள்ளது.எனவே நாள் ஒன்றுக்கு அரசு அறிவித்த ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அண்ணா திராவிட கழக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் கருப்பம்புலம் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் தமிழ்வேந்தன், நகர செயலாளர் கவிபாரதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anna Dravidian Corporation ,Vedaranyam taluk ,
× RELATED ஒரு கோட்டை நெல் ரூ.1, 622 : குமரியில் நெல்...