×

கிராம மக்கள் கோரிக்கை காரைக்காலில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற மின்துறை ஊழியர் பரிதாப பலி

காரைக்கால், பிப்.13: நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் செல்வம் (22). இவர் தனது நண்பர் நாகூரை சேர்ந்த சித்ரவேல்(24) என்பவருடன், கடந்த 10ம் தேதி தரங்கம்பாடியிலிருந்து பைக்கில் காரைக்காலுக்கு சென்றனர். காரைக்கால் பாரதியார் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற பைக் மற்றும் அதற்கு முன் சென்ற மற்றொரு பைக் என இரு பைக்குகளில் மீதி கீழே விழுந்தார். இந்த விபத்தில், செல்வம், சித்ரவேல் மற்றும் மற்ற இரண்டு பைக்குகளில் சென்ற, காரைக்கால் வரிச்சிக்குடியை சேர்ந்த ஜீவானந்தம்(40) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். பச்சூரைச் சேர்ந்த மின்துறை ஊழியர் தன்ராஜ் (52) என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இவர்கள் 4 பேரும், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த தன்ராஜை, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தன்ராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகரப் போக்குவரத்து காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Residents ,road accident ,Karaikal ,
× RELATED குடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது