×

நாகையில் நாளை நடக்கிறது திருக்குவளை பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழப்புணர்வு கூட்டம்

கீழ்வேளூர், பிப்.13:தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்கம் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்புக்கான நடைமுறை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு கூட்டம் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் புலமுதல்வர் துரைராசன் தலைமை தாங்கினார். கல்லூரியின் கணித துறை உதவி பேராசிரியரும், சுகாதார ஒருங்கிணைப்பாளருமான சுதா முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கூட்டத்தில் மருத்துவ மனை மருத்துவர் வேதையன் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார். கூட்டத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொணடனர்.

Tags : Awareness Meeting ,
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்!!!