×

10 மணிக்குமேல் பஸ் இல்லை தனித்தீவாய் மாறும் தேவாரம்

தேவாரம், பிப்.12: தேவாரத்தில் இருந்து உத்தமபாளையம், போடி உள்ளிட்ட ஊர்களுக்கு இரவில் பஸ்கள் இல்லாத நிலையில் வெளியூர் பயணிகள் திண்டாடுகின்றனர். தேவாரம் நகரை சுற்றிலும் லட்சுமிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் அதிகமானஅளவில் மக்கள் தேவாரத்திற்கு வருகின்றனர். வியாபாரம், உள்ளூர் விசேஷங்களில் கலந்து கொண்டு விட்டு   மீண்டும் இரவு 10 மணிக்குமேல் வெளியூர்களுக்கு செல்வதற்கு வந்தால் எந்த பஸ்களும் இருப்பதில்லை. குறிப்பாக கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூட பஸ்கள் இல்லை. இரவு பத்தரை மணிக்கு மேல் போடி செல்லக்கூடிய பஸ்கள் இல்லை. அரசுபஸ்களோ தனியார் பஸ்களோ இல்லாதநிலையில் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். அதிகமானஅளவில் பயணிகள் காத்திருந்தும் எந்தவித பஸ்களும் இல்லாதநிலையில் மக்கள் தவிக்கின்றனர். எனவே இரவுநேரங்களில் பஸ்களை இயக்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தேவாரம் இரவில் தீவுபோல் தனித்துவிடப்படுகிறது. காரணம் மிக ஒதுக்குப்புறமான ஊராக உள்ளது. குறிப்பாக நள்ளிரவுநேரங்களில் இங்கிருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இல்லை. இதனால் திண்டாட்டம்தான் உண்டாகிறது. என்றனர்.

Tags :
× RELATED அவசர தேவைக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்