×

மூணாறு மக்கள் பீதி சாலையில் உலா வரும் காட்டுமாடுகள் வனத்துறை கட்டுப்படுத்துமா?

மூணாறு,பிப்.12: மூணாறில்  முக்கிய சாலையாக கருதப்படும் மூணாறு-நல்லத்தண்ணி  சாலையில் காலை நேரத்தில் காட்டு மாடு உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தொந்தரவு ஒருபுறம் இருக்க நேற்று முன்தினம் மூணாறில் காட்டு மாடு முக்கிய சாலையில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மூணாறில் அமைந்துள்ள மிகவும் முக்கியமான பகுதியாகும் நல்லத்தண்ணி. இங்கு சிறுமலர் பெண்கள் பள்ளி, தேயிலை அருங்காட்சியகம் , தேயிலைகள் ஏற்றுமதி செய்யும் ஐ.டீ.டி நிறுவனம் மற்றும் டாட்டா நிறுவனத்தின் கால் சென்டர் போன்றவை அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பள்ளி மாணவிகள் , சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுவரும் இந்த சாலையில் நேற்று முன்தினம் காலை காட்டு மாடு உலாவந்தது. பெந்தகோஸ்த்தா கிறிஸ்துவ சபையின் அருகில் உள்ள காட்டில் இருந்து இறங்கிய காட்டு மாடு பிரதான சாலையில் வேகமாக ஓடியது பின்னர் அருகில் உள்ள காட்டுக்குள் நுழைந்தது.  இந்த சமயத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் செல்லாத காரணத்தால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. காட்டு யானைகள் மட்டும் இரவு நேரங்களில் வந்துகொண்டிருந்த நிலையில் காலை நேரத்தில் காட்டு மாடு உலாவியது பள்ளி மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வன விலங்குகள் முக்கிய சாலைகளில் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.மக்கள் கூறுகையில், ‘‘மூணாறில் காட்டுயானைகள் மட்டுமின்றி காட்டுமாடுகளின் தொந்தரவும் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமாடுகள் நுழைவதை வனத்துறை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : forests ,forest department ,road ,Munnar ,
× RELATED தொகரப்பள்ளி காப்புக்காட்டில்...