×

விவசாய கடன் அட்டை பெற அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப். 12: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படும் வகையில் விவசாய கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) திட்டம் அனைத்து வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மற்றும்  மீன் வளர்ப்பிற்கு நடைமுறை மூலதனமாக கடன் வழங்கப்படுகிறது. இக்கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசால் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு 70 வயது வரை தனிநபர் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெற்று வரும் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 525 விவசாயிகள் இதுவரை எந்த வங்கியிலும் விவசாய கடன் அட்டை பெறவில்லையெனில், அவர்கள் ஏற்கனவே வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர்களை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம். அனைத்து தரப்பு விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெறுகின்றன.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...