கலெக்டர் தகவல் முன்விரோதம் காரணம் மாநகராட்சி துப்புரவு ஊழியரை அரிவாளால் வெட்டியவர் கைது

திருச்சி, பிப்.12: முன்விரோதம் காரணமாக துப்புரவு ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி உறையூர் மேலகல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார்.  இவரது உறவினர் மகளை அதே பகுதி கீழகல்நாயக்கன் தெருவை சேர்ந்த அப்பாஸ் (எ) பாலகுமார் (23) என்பவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த மணிகண்டன், அப்பாசை கண்டித்தார். இதனால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையில் அப்பாஸ் கடந்த சில மாதங்களுக்கு மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளராக சேர்ந்தார். அப்போது, அப்பாஸ் குறித்து சூபர்வைசரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மணிகண்டன் மீது அப்பாஸ் கோபத்தில் இருந்து வந்தார்.

Advertising
Advertising

இந்நி்லையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டன் புத்தூர் 4 ரோடு பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பாஸ், மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த உறையூர் போலீசார் அப்பாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: