மணப்பாறை அருகே கிராம மக்களுக்கு மனநோயாளி தொடர் இம்சை மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர் போலீசார்

மணப்பாறை, பிப்.12: மணப்பாறை அருகே கிராமத்தினரை அடிக்கடி தாக்கி இம்சை தந்த மனநோயாளியை போலீசார் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். மணப்பாறையை அடுத்த செவலூரை சேர்ந்தவர் சின்னத்துரை(43), சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட சிறுமியின் தாயாரை சின்னத்துரை கல்லால் தாக்கியுள்ளார். இதுபோல, சின்னத்துரையால் அப்பகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சின்னத்துரையை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யும்படி மணப்பாறை போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர்.

Advertising
Advertising

இதனையடுத்து, டிஎஸ்பி., குத்தாலிங்கம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், திருச்சி தீரன் நகரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மனநல மைய மருத்துவமனை ஒன்றில் சின்னத்துரையை அழைத்து வந்து சேர்த்து சிகிச்சை பெற ஏற்பாட்டை செய்தனர். இதன்படி, நேற்று சின்னத்துரை மனநல மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Related Stories: