முசிறி-குளித்தலையை இணைக்கும் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

தொட்டியம், பிப்.12: தொட்டியம் அடுத்த மேய்க்கல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தமிழ்நேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முல்லைநாதன், மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது திரையரங்கு மற்றும் தொலைக்காட்சிகளில் ஆபாசமாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். விவசாயத்தையும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் இயற்கை வாயு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுப்பதற்கு தடை செய்ய வேண்டும்.

Advertising
Advertising

விவசாய பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டும். முசிறி-குளித்தலையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பெரியார் பாலத்தை பொறியாளர்கள் கொண்டு உறுதித்தன்மையை ஆய்வு செய்வதோடு, பாலத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: