மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் பூசாரிகள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை

தா.பேட்டை, பிப்.12: தா. பேட்டை அருகே காருக்குடி கிராமத்தில் கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தா.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களுக்கும்,
Advertising
Advertising

நிர்வாகிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் வரும் நிதி நிலை அறிக்கையில் பூசாரிகள் நல வாரியம் செயல்பட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: