சினிமா போல் நடந்த சம்பவத்தால் பரபரப்பு திருச்சி புங்கனூர் கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர மக்கள் வலியுறுத்தல்

திருச்சி, பிப்.12: திருச்சி புங்கனூர் கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி ராம்ஜிநகருக்கும் அல்லித்துறைக்கும் இடையிலும், மற்றொரு மார்க்கத்தில் திருச்சி-திண்டுக்கல் சாலையிலுள்ள திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், ராம்ஜிநகருக்கும் இடையில் அமைந்துள்ளது புங்கனூர் கிராமம். ராம்ஜிநகரிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்திலும், பவர் ஹவுஸிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்திலும் இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கோ அல்லது சத்திரம் பஸ் நிலையத்திற்கோ செல்லவேண்டுமென்றால் சுமார் ஒன்றரை கி.மீ. நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

Advertising
Advertising

மேலும் இரவு நேரங்களில் ஏதேனும் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் ஊர் பொதுக்களாகிய நாங்கள் பஸ் வசதிகளில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். சத்திரம் மற்றும் மத்திய பஸ் நிலையங்களுக்கு செல்ல வசதியாக ராம்ஜிநகரிலிருந்து புங்கனூர் வழியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், பவர் ஹவுஸ் வழியாக சத்திர பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: