கேலி செய்ததை வீட்டில் கூறியதால் ஆத்திரம் ஆட்டோ டிரைவரை தாக்கிய நண்பர்கள் கைது

திருச்சி, பிப். 12: திருச்சி பாலக்கரை கோரிமேடு ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(29), ஆட்டோ டிரைவர். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் பாக்யராஜ் மற்றும் மேகராஜ். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் நாகராஜை, பாக்யராஜ் மற்றும் மேகராஜ் இருவரும் விளையாட்டிற்காக கேலி கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து பாக்யராஜ் அக்காவிடம் நாகராஜ் கூறி கண்டித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாக்யராஜ், மேகராஜ், நாகராஜிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நாகராஜ் இது குறித்து பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>