×

அரியலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

அரியலூர், பிப்.12: அரியலூர்அருகேஅஸ்தினாபுரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அஸ்தினாபுரம் கிராமத்தில் விதைப்பண்னை திட்டத்தின்கீழ் கருணாமூர்த்தி என்பவர் 1எக்டர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நிலக்கடலை ஜி.ஜே.ஜி 9 என்ற ரகத்தினை மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ரகம் உயர்விளைச்சல் கொடுக்கக் கூடிய ரகமாக உள்ளது. வேளாண்மைத் துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதிகபடியான பரப்பளவில் பயிரிடுவதற்காக விதைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், ராஜேந்திரன் என்பவர் வயலில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மழைதூவான் மூலம் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைதூவான் மூலம் நீர்தெளிக்கும்போது, குறைவான நீரில் அதிகமான பரப்பிற்கு தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டப்படுகிறது. மேலும் தாமரைக்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் ரெங்கராஜ் என்பவரின் வயலில் 4000 மானியத்தில் வழங்கப்பட்ட சூரியமின் விளக்கு பொறி பயிரிடப்பட்டுள்ள நெல்வயலை பார்வையிட்டார். இந்த பொறியின் மூலம் தீமைசெய்யும் பூச்சிகளை எளிதாக அழித்துவிட முடிகிறது. மேலும், பூச்சிமருந்து தெளிக்கும் செலவும் விவசாயிகளுக்கு குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேற்கு சீனிவாசபுரம் கிராமத்தில் விவசாயி சுந்தரம் என்பவர் இயற்கையான முறையில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை வயல்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தக) சுரேஷ், சவீதா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் முருகன், ரமேஷ்குமார் உதவி விதைஅலுவலர் கொளஞ்சி மற்றும் அட்மா உதவிதொழில் நுட்பமேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். விழாக் காலங்களில் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மின்சார வாரியத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு கொக்கி போட்டு நேரடியாக மின்சாரத்தை எடுப்பது பயிர் சேதத்தை தவிர்க்க வயல்களுக்கு மின்சார வேலி அமைப்பது உயிர் சேதங்களை ஏற்படுத்தும் இது மிகப்பெரிய குற்றமாகும்.

Tags : Ariyalur District ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...