×

விதை விற்பனை உரிமச்சான்று 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

அரியலூர், பிப்.12:திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் விதை விற்பனை செய்ய விதைச்சான்று இயக்குநரகத்தால் விதை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. விதை விற்பனை உரிமத்தின் காலாவதி காலம் 3 வருடங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது விதை கட்டுப்பாட்டு ஆணையின்படி மத்திய அரசால் காலாவதி காலம் குறித்து திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21ம் தேதிக்குப் பிறகு விதை விற்பனை உரிம காலாவதி காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனாவுக்கு 5 பேர் பலி