×

ஆதனக்குறிச்சியில் அரசு வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

அரியலூர், பிப்.12: அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்று வரும் பாரத பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப் பணிகளை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பாரத பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 1356 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 854 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 502 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனக்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமானவைகளாக எனவும், சரியான அளவில் கட்டப்பட்டுள்ளனவா எனவும் பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆதனக்குறிச்சி ஊராட்சி, புதுபாளையம் பெரியவாரியில் மகாத்மாகாந்தி தேமசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.90 லட்சம் மதிப்பில் சிமெண்ட கான்கிரீட் தடுப்பணை கட்டுவதற்கு இடத்தினை தேர்வு செய்யும் பணியினை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி, தேவி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். கடன் கொடுத்து விவசாயிகளிடம் மிரட்டி இந்த விலைக்குத்தான் வாழைத்தார் கொடுக்க வேண்டும் என பயமுறுத்துகின்றனர். தார்வெட்ட ஆரம்பிக்கும்போது ஏதோ அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார்கள். மீதி பணத்திற்கு பல மாதங்கள் கால்கடுக்க அவர்கள் வீட்டுவாசலில் விவசாயிகள் தவமிருக்கின்றனர்.

Tags : Government House Building ,
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்