×

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்

அரியலூர், பிப்.12: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்புகுறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 45 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு, 11 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும், 07 முன்னாள் படைவீரர் வாரிசு தாரர்களுக்கு ரூ.7லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் மாதாந்திர நிதியுதவிக்கான காசோலையினை கலெக்டர் ரத்னா வழங்கினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் லெப்.கமாண்டர் சங்கீதா (ஓய்வு), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், முன்னாள் படைவீரர் நலஅலுவலக கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள்படை வீரார்கள், வாரிசுதாரர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,soldiers ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...