சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கோவை, பிப்.12: சீனாவில் இருந்து கோவை வந்த 4 பேர், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் வரை 74 பேர் சீனாவில் இருந்து வந்தனர். கோவையில் இருந்து சீனாவுக்கு சென்ற மேலும் 4 பேர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் கோவை திரும்பினர். கோவை விமானநிலையத்தில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இருக்கிறதா? என்று சிறப்பு மருத்துவ குழுவினா் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் 4 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை புறநகர் பகுதியில் இதுவரை 45 பேரும், மாநகர பகுதியில் 34 பேரும் சீனாவில் இருந்து வந்து உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்’ என்றனர்.

Related Stories: