மின்கம்பங்கள் இடம் மாற்றும் பணி கிழக்கு பாண்டிரோட்டில் 9 நாட்கள் மின்தடை

விழுப்புரம், பிப். 12: கிழக்கு பாண்டி ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால், அங்கு அமைந்துள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை இடம்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் திருநகர், தேவநாதசுவாமி நகர், லட்சுமி நகர், ஹவுசிங்போர்டு, மாருதி நகர்,  கிழக்கு பாண்டிரோடு, கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, கம்பன் நகர்,  ஆசிரியர் நகர், பாணம்பட்டு பாதை, ரெட்டியார் மில், தொடர்ந்தனூர்,  மகாராஜபுரம், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் வருகிற 13, 15, 17, 19, 22, 24, 25, 27, 29ம்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: